பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 25,000 கோடி தொழில்முனைவோர் நிதி..! மத்திய அரசு தகவல்..!
4 April 2021, 5:51 pmஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து திட்டத்தின் கீழ் ரூ 25,586 கோடியை மார்ச் 23 வரை 1.14 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 16,258 பேருக்கு மொத்தம் ரூ 3,335.87 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பழங்குடியினர் பிரிவில் 4,970 பேருக்கு ரூ 1,049.72 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல், இந்த திட்டத்தின் கீழ் 93,094 பெண்களுக்கு ரூ 21,200.77 கோடியை அரசு அனுமதித்துள்ளது. மொத்தமாக 1,14,322 பேருக்கு மொத்தம் ரூ 25,586.37 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வலுவூட்டல் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதை மையமாகக் கொண்டு அடிமட்ட அளவில் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் ஏப்ரல் 5, 2016 அன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டம் 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வர்த்தக, உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் நிறுவனத்தைத் தொடங்க உதவுவதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0
0