எல்ஐசி ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்..! ஊதியம் உயர்வு மற்றும் வேலைநாட்கள் குறைப்பு..! மத்திய அரசு சர்ப்ரைஸ்..!

16 April 2021, 6:07 pm
LIC_UpdateNews360
Quick Share

இந்திய அரசு நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்.ஐ.சி) ஊழியர்களுக்கு மத்திய அரசு சனிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. எல்.ஐ.சி என்பது நிதி அமைச்சகத்தின் கீழ் அரசு நடத்தும் காப்பீட்டு நிறுவனம் ஆகும்.

இதன் மூலம் இனி சனிக்கிழமையன்று எல்ஐசியின் கிளைகளில் எந்தவொரு வேலைகளும் மேற்கொள்ளப்படாது. 1881’ஆம் ஆண்டு நெகோஷியபிள் இன்ஸ்ட்ருமென்ட் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதன் மூலம் அரசாங்கம் உடனடியாக சனிக்கிழமையை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

இனி நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி அலுவலகங்கள் ஒவ்வொரு வாரமும் ஐந்து நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) வேலை செய்யும். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் அலுவலகங்கள் மூடப்படும்.

சமீபத்திய முடிவு எல்.ஐ.சியின் 1.14 லட்சம் ஊழியர்களுக்கு பயனளிக்கும். எல்.ஐ.சி ஊழியர்கள் சனிக்கிழமையை நீண்ட காலமாக பொது விடுமுறையாக அறிவிக்குமாறு அரசாங்கத்திடம் கோரி வந்த நிலையில், தற்போது அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது.

இதே போல் எல்ஐசி ஊழியர்களுக்கு மற்றொரு ஜாக்பாட்டாக ஊதிய திருத்தத்தையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 1.8.2017 முதல் அமலாகும் வகையில் எல்.ஐ.சி ஊழியர்களுக்கான ஊதிய விகிதங்களை திருத்துவதற்கான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா கூறுகையில், ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு மாதத்திற்கு 25 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

அரசு காப்பீட்டு மற்றும் முதலீட்டு நிறுவனமான எல்ஐசி 1956’இல் நிறுவப்பட்டது. காப்பீட்டு சந்தையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இருந்தாலும் தொடர்ந்து, எல்ஐசி மக்களின் ஏகோபித்த நம்பிக்கையை பெற்று முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 3983

0

0