நீலகிரியில் பெர்சிமன் பழம் சீசன் துவங்கியது.! விற்பனைக்கு தயார்.!!

14 August 2020, 6:34 pm
Japan Fruit- Updatenews360
Quick Share

நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் மருத்துவ குணம் கொண்ட ஜப்பான் நாட்டின் தேசிய பழமான பெர்சிமன் பழங்கள் விற்பனைக்கு தயாா் நிலையில் உள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பேரி, ஆரஞ்சு, பீச், பிளம், எலுமிச்சை, லிச்சி உள்ளிட்ட ஏராளமான பழ மரங்கள் உள்ளன. இதில், அரிய வகை “பெர்சிமன்’ பழ மரங்களும் உள்ளன.

இம்மரங்களில் தற்போது சீசன் துவங்கியுள்ளது. பெர்சிமன் பழங்கள் கொத்துக் கொத்தாக காய்த்து தொங்குகின்றன. இந்த பழத்தில் சி வைட்டமீன் அதிகமாக உள்ளது, இந்த பழத்தை பறித்து ஒரு நாள் முழுவதும் எத்தனால் திரவத்தில் ஊறவைத்து கழுவி அதன் பிறகே சாப்பிட வேண்டும் மேலும் வயிற்றில் உள்ள கொடிய பூச்சிகளை வெளியேற்றும் தன்மை உள்ளது.

சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்த கூடிய மருத்துவ குணம் கொண்டது, பொதுவாக, ஜீன் மாதம் துவங்கி ஆகஸ்ட், செப்டம்பர் வரை பெர்சிமன் சீசன் துவங்கி நடைபெறும் ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்டு இப்பழம், ஜப்பான் நாட்டின் தேசிய பழமாகவும் உள்ளது.

இந்த பெர்சீமன் பழம் தமிழ்நாட்டில் குன்னுார் தட்ப வெப்ப நிலையில் மட்டும் வளரக்கூடியது. தற்போது குன்னுாா் பழப்பண்ணையில் பொ்சிமன் பழங்களின் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. கிலோ 165 ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 15

0

0