மாருதி சுசூகியை பின் தொடரும் டாடா மோட்டார்ஸ்.! இழப்பு அதிகரிப்பு.!!
3 August 2020, 10:33 amகொரோனா பொதுமுடக்கத்தால் ஆட்டோ மொபைல்ஸ் வர்த்தகம் கடும் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் டாடா மோட்டார்ஸ் இழப்பு நடப்பு நிதியாண்டின் காலாண்டில் அதிகரித்துள்ளது.
உள்நாட்டைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இழப்பை சந்தித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் காலாண்டில் மொத்த வருவாய் ரூ.31,983.06 கோடியாக இருந்தது என தெரிவித்துள்ளது.
இந்த வருவாயை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சியை அடுத்து நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிகர இழப்பு ரூ.3,679.66 கோடியில் இருந்து ரூ.8,443.92 கோடியாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே மாருதி சுசூகி நிறுவனம் கடந்த 17 வருடம் இல்லாத அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளது குறிப்பிடதக்கது.