வாகன உற்பத்தி துறை வளர்ச்சியடையாமல் உள்ளதற்கு இதுதான் காரணம் : பட்டியலிட்ட போர்ஸ் மோட்டார்ஸ்!!
14 September 2020, 5:20 pmவாகன உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு தடைகற்களாக வரியும், வட்டியும் இருப்பதாக போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் முதலீட்டுக்கான வட்டி விகிதம் அதிகமாக உள்ளதாக மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரத்தை சேர்ந்த போர்ஸ் டேமாட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளழது.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொழில்நுட்பம், பொருட்கள், ஆலைகள், வணிக நடைமுறைகள் ஆகியவற்றுக்கு அதிக முதலீடு தேவைப்படும் நிலையில், வட்டிவிகிதம் அதிகமாக உள்ளதாக கூறியுள்ளது.
இந்தியாவில் உள்ள வட்டி விகிதங்களை வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டும் போது 6 முதல் 8 விழுக்காடு வரை வேறுபாடு உள்ளதாகவும், இது பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிடுவதில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இது போல சரக்கு சேவை வரி, சாலை வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் வாகன மதிப்பில் 50 விழுக்காமு அளவுக்கு உள்ளதாகவும் போர்ஸ் டேமாட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
0
0