Whirlpool லாபம் சரிவு.!!

20 June 2020, 10:24 am
Whirlpool - Updatenews360
Quick Share

வேர்ல்பூல் இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் சரிவடைந்துள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் பிரபல நிறுவனமான வேர்ல்பூல் இந்தியா நிறுவனத்தின் ஒட்டு மொத்த நிகர லாபம் கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.92.34 கோடியாக குறைந்துள்ளது.

இதற்கு முந்தைய நிதியாண்டின் போது இதே நான்காவது காலாண்டில் அந்நிறுவனம் ஈட்டிய லாபத்தை ஒப்பிடும் போது 12.19 சதவீதம் குறைவாகும். வேர்ல்பூல் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.1,355.15 கோடியில் இருந்து குறைந்து ரூ.1353.62 கோடியாக உள்ளது.

இது குறித்து வேர்ல்பூல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2019 -20 நிதியாண்டில் 19.63 சதவீதம் லாபம் அதிகரித்து ரூ.490.19 கோடியாகவும், வருவாய் 11.02 சதவீதம் உயர்ந்து ரூ.5,992.52 கோடியாக இருந்ததாக தெரிவித்துள்ளது.