நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணி நிச்சயதார்த்த வீடியோ வைரல்..!

Author: Rajesh
29 March 2022, 11:18 am
Quick Share

நடிகர் ஆதி வல்லினம் யாகாவாராயினும் நா காக்க போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து மரகத நாணயம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது. அதன்பிறகு தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வந்தார்.

நடிகை நிக்கி கல்ராணி டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது அதன் மூலம் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தன. அதன்பிறகு வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் இணைந்து மரகதநாணயம் படத்தில் நடித்திருந்தனர். அப்போதிலிருந்தே இவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. தற்போது அந்த காதல் உண்மையாகியுள்ளது என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். ஆனால் இவர்கள் வெளிப்படையாக கூறாமல் நாங்கள் இருவரும் நண்பர்கள் என கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மார்ச் 24. 3. 2022 ஆம் ஆண்டு இவர்கள் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். தற்போது வீடியோ தொகுப்பினை தனது ட்டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 983

0

0