புது விதமான குத்து டான்ஸ் போட்ட ரேஷ்மா… அலறும் ரசிகர்கள்!

Author: Rajesh
25 July 2022, 6:45 pm
Reshma Pasupuleti
Quick Share

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும் .

விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார்.

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே . மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளமெராக போஸ் கொடுக்கும் நடிகை ரேஷ்மா தற்போது குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

Views: - 671

2

0