மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசைவிட வேகமாக உதவி செய்த அஜித்.. தல தல தான்..!

Author: Vignesh
7 December 2023, 10:30 am
ajith
Quick Share

தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு ‘மிக்ஜாம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 100 கி.மீ தொலைவில் வடகிழக்கில் ‘மிக்ஜாம்’ புயல் மையம் கொண்டுள்ளது.

‘மிக்ஜாம்’ புயல் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால், ஆந்திராவில் நாளை முற்பகல் பாப்டலா என்ற இடத்தில் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து 100 கி.மீ தொலைவில் ‘மிக்ஜாம்’ புயல் மையம் கொண்டுள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை விடாமல் பெய்து வந்தது.

ajith-updatenews360

இந்நிலையில், அரசும் தனியார் நிறுவனங்களும் தொடர்ந்து இரவு பகல் பார்க்காமல் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது. பிரபலங்கள் அரசு தனியார் நிறுவனங்கள் என பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அதேபோல், பிரபலங்களில் சூர்யா, கார்த்திக், ஹரிஷ் கல்யாண் நிதியுதவி செய்ய விஜய் ரசிகர்கள், நடிகர் பார்த்திபன் ஆகியோர் களத்தில் இறங்கி உணவுகளை வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில், ரசிகர்கள் பலரும் அஜித் ஒரு உதவியும் செய்யவில்லை என கமெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால், அஜித் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் தனது நண்பர்கள் மூலம் மக்களுக்கு உதவி செய்து வருகிறாராம். இந்த தகவல் தற்போது வெளியாக ரசிகர்கள் அஜித் எப்போதும் தான் செய்யும் விஷயங்களை மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என நினைக்க மாட்டார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Views: - 182

0

0