OMG.. அஜித்துக்கு ஹிட் கொடுத்த அமராவதி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த சீரியல் நடிகரா?…

Author: Vignesh
17 பிப்ரவரி 2024, 7:15 மணி
ajith-updatenews360
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் படங்களில் நடிப்பதோடு சரி எந்த பொது நிகழ்ச்சிக்கோ, திரைப்படம் சார்ந்த விழாக்களிலோ பங்கேற்கவே மாட்டார். இதனை அவர் தனது கொள்கையாகவே பல வருடங்களாக செய்து வருகிறார். இதனை சிலர் பாராட்டினாலும் பெருவாரியான மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

ajith-updatenews360

இந்நிலையில், விடாமுயற்சி படத்தில் பிசியாக நடித்து வரும் அஜித் குமார் அதற்கு அடுத்தபடியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது, நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ajith-updatenews360

இந்நிலையில், முன்னதாக செல்வா இயக்கத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் அமராவதி. இந்த படத்தில் சங்கவி, நாசர், சார்லி, தலைவாசல் விஜய் என பலர் நடித்து இருந்தனர். இப்படம் அஜித்தின் திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்திருந்தது அமராவதி.

ajith-updatenews360

பால பாரதி இசையமைப்பில் படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். அஜித்தின் திரைப்பயணத்தில், பெரிய ஹிட் படமாக அமைந்த இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரபல சீரியல் நடிகரான விஜய் ஆதிராஜ் தானாம்.

Vijay_Adhiraj

  • Tamilisai Thirumavalavan தரம் தாழ்ந்த விமர்சனமா? தப்பாக இருந்தால் வருந்துகிறேன்.. திருமாவளவன் திடீர் பல்டி!
  • Views: - 378

    0

    0