டீனேஜிலேயே ‘கிளப்பிற்கு’ போயிடுவேன்.. மதுப் பழக்கம் குறித்து பேசிய டிடி..!

Author: Vignesh
12 August 2023, 3:30 pm
Quick Share

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.

Dhivyadharshinis-updatenews360

இதனிடையே, சமீபத்தில் பேட்டி அளித்த டிடி பேசுகையில் தன்னுடைய அப்பா மிகவும் அறிவானவர் கடின உழைப்பாளியும் கூட, எதையும் முடியாது என்று சொல்ல மாட்டார். தான் தன்னுடைய டீனேஜிலேயே நடக்கும் ஒரு பார்ட்டிக்கு செல்ல வேண்டும் என்று அம்மாவிடம் சொன்னேன். ஆனால், அம்மா என்னை அனுமதிக்கவில்லை. அதே சமயம் அப்பாவிடம் தெரிவித்தேன் அவர் என்னை அனுமதித்தார். ஏனென்றால், அப்பாவிற்கு நம்பிக்கை இருந்தது. என்ன பண்ணாலும் நான் குடிக்க மாட்டேன் என்று இன்றுவரை என்னை சுற்றி 100 குடிகாரர்கள் இருந்தாலும் நான் குடிக்க மாட்டேன் என்று டிடி வெளிப்படையாக பேச உள்ளார்.

Views: - 345

0

0