“கும்முனு இருக்கும் கோவா பழம்” – சம்யுக்தாவின் போட்டோவை பார்த்து ஜொள்ளு ஊத்தும் இளசுகள்

8 February 2021, 8:16 pm
Quick Share

வழக்கமாக பேரும் புகழும் மற்றும் படவாய்ப்புகளும் அமைய வேண்டுமென்று பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்வார்கள். ஆனால் சம்யுக்தா யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் கால் பதித்து விட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். சம்யுக்தா பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பின் தனது கேமை தனது வழக்கத்தில் ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் ஏனோதானோவென விளையாடி, மக்களின் கோபத்தை வாங்கிக் கொண்டார். அதற்கு, ஆரி மற்றும் அனிதாவை முறைத்துக் கொண்டது தான் காரணம் என கூறப்படுகிறது.

இருந்தாலும் பல நாட்கள் வெளியே வராமல் எப்படியோ தப்பித்து வந்ததற்கு விஜய் டிவியில் தொகுப்பாளராக இருக்கும் இவரது தோழி பாவனா தான் காரணம் என கூறப்பட்டது.

ஆனாலும் வெளிவந்த பிறகு புகைப்படங்களை பதிவேற்றி தன்னை அப்டேட்டில் வைத்துக் கொள்ளும் சம்யுக்தா, தற்போது சில புகைப்படங்களை பதிவேற்றி இருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘கும்மென்ற கோவா பழம்’ என அவரை வர்ணித்து வருகின்றனர்.

Views: - 2

0

0