“நீ யார் என்பதை பொறுத்து நான் யார் என்பது மாறும்” மிரட்டும் தனுஷின் “கேப்டன் மில்லர்” ட்ரைலர்!

Author: Rajesh
6 January 2024, 6:06 pm
CAPTAIN MILLER trailer
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் , பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகியது.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து இரண்டு லிரிக்கல் பாடல்கள் வெளியாகிது. தொடர்ந்து இப்படத்தை குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் தனுஷின் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை பல மடங்கு அதிகரிக்க செய்துள்ளது.

குறிப்பாக தனுஷின் வெறித்தனமான நடிப்பு மிரட்டி எடுக்கிறது. இதில், நீ யாரு உனக்கு என்ன வேண்டும் என்பதை பொறுத்து நான் யார் என்பது மாறும்” என தனுஷ் பேசும் டயலாக் தேறி மாஸாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி உற்சாகத்துடன் ட்ரைலரை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ:

Views: - 285

0

0