சினிமாவில் ஓரம் கட்டப்படும் தனுஷ்: அமைதி காத்த ரஜினி… சொல்லி அடிக்கும் லதா ரஜினிகாந்த்… !

Author: Rajesh
17 March 2022, 5:43 pm
Quick Share

நடிகர் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா பிரிவதாக சமூகவலைத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டதில் இருந்து, சமூக வலைதளங்களில் இருவரும் பிரிந்ததற்கு பல்வேறு காரணங்கள் பரவி வருகிறது. இவர்கள் பிரிவு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தாலும், இவர்களை ஒன்று சேர்த்து வைக்கும் முயற்சியில் ரஜினி மற்றும் கஸ்தூரி ராஜா ஈடுபட்டு வருகிறார்கள். சில நடிகைகளுடன் தனுஷ் நெருங்கி பழகியதே இவர்களின் விவகாரத்திற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டு வருகிறது.  

இருந்தாலும் பிரிந்ததற்கான காரணத்தை இருவரும் இதுவரை தெரிவிக்கவில்லை , தற்போது படப்பிடிப்பில் அதிக அளவு கவனம் செலுத்தி வருகிறார். ரஜினிக்காக ஐஸ்வர்யா, மீண்டும் கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்திருந்த உள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும், மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டாராம்.

என் பெண் வாழ்க்கையை கெடுத்த, தனுஷின் கெரியரை காலி செய்யாமல் விட மாட்டேன் என்று லதா ரஜினிகாந்த் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. லதா ரஜினிகாந்த்திற்கு ஆதரவாக பிரபல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தற்போது தனுஷை ஓரங்கட்ட துவங்கி விட்டாளர்களாம்.

சமீபத்தில் தனுஷ் இயக்குநர் வெற்றிமாறனை அணுகி, படம் பண்ணலாம் என்று கேட்டும், இப்போதைக்கு அதற்கு வாய்ப்பு இல்லை என்று வெற்றிமாறனும் கறாராக சொல்லிவிட்டாராம். இதனால் சினிமாவில் தனுஷ் ஓரம் கட்டுப்படுவதாகவே சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

Views: - 1160

20

8