“வெறுப்பின் நெருப்பில் வளர்ந்தவன் நான்” – ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுத்ததன் காரணம் தெரியுமா..?

Author: Shree
24 August 2023, 2:05 pm
rajinikanth
Quick Share

நடிகர் விஜய் படங்கள் அதிக வசூல் ஈட்டுவதால் அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் எனவும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார் எனவும் தொடர்ந்து கருத்து மோதல்கள் சமூக வலைதளங்களிலும் திரையுலக நட்சத்திரங்களுக்கும் இடையே ஏற்பட்டு வருகிறது.

இதனிடையே, சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 160க்கும் மேற்பட்ட படங்களில் நடிகர் ரஜினி நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் அவரது 169வது படமாக இயக்குனர் ஜெயிலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனிடையே ரஜினிகாந்திற்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்ற போட்டி விஜய், அஜித் ரசிகர்களிடையே பெரும் அக்கப்போரே நடைப்பெற்று வருகிறது. அப்படி அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று வாரிசு ஆடியோ லான்சில் பல பிரபலங்கள் புகழ்ந்தும் வந்தனர். இதனை விஜய் ரசிகர்களும் கொண்டாடினர்.

ஆனால் ரஜினியால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதற்கு எப்படியாவது எதிர்ப்புகள் தெரிவித்து முடிவுகட்டவேண்டும் என நினைத்திருந்த ரஜினி எப்போடா ஜெயிலர் ஆடியோ லான்ச் நடத்துவீங்க என காத்திருந்தது போல் அந்த நிகழ்ச்சியில் தான் நினைப்பதையெல்லாம் பேசிவிட்டார்.

அதாவது ஜெயிலர் பாடலில் பட்டத்தை பறிக்க 100 பேரு என்ற பாடல் வரிகள் நேரடியாகவே விஜய்யை தாக்கியது. ஆனால் மேடையில் பேசிய ரஜினி தனக்கு விருப்பமே இல்லாமல் 80க்களில் கொடுக்கப்பட்டது தான் இந்த சூப்பர் ஸ்டார் பட்டம்.

அந்த பட்டம் எனக்கு பிடிக்கவே இல்லை. அப்போது வெளிவந்த படங்களில் தயவு செய்து : டைட்டிலில் சூப்பர் ஸ்டார் என போட்டுவிடாதீர்கள் என சொல்லியிருக்கிறேன். அந்த பட்டம் கிடைத்த நாளில் இருந்து பல பிரச்சனைகள் சந்தித்துள்ளேன். அந்த வெறுப்பின் நெருப்பில் வளர்ந்து இன்று உயர்ந்திருக்கிறேன் என ரஜினி பேசினார்.

ரஜினிக்கு இந்த பட்டத்தை கொடுத்தது இன்றைய பிரபல தயாரிப்பாளராக இருக்கும் கலைப்புலி எஸ். தாணு அவர்கள் தான். “அகில இந்திய சூப்பர் ஸ்டார்” என்று தான் கொடுத்தார்களாம். உடனே ரஜினி அய்யய்யோ வேண்டாம் சார் வேணும்னா “சூப்பர் ஸ்டார் ” என்று போட்டுக்கோங்க என கூறினாராம். இதை ரஜினி விரும்பி வாங்கவே இல்லை. அதை அவர் படங்களில் போட சொல்லி கட்டாயப்படுத்தியதும் கிடையாதாம். ஆனால் ரஜினியை சூப்பர் ஸ்டாராகவே மக்களே விருப்பத்தோடு ஏற்றுக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 188

0

0