சாதனை தமிழன் சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது – விருது பெறுபவர்களின் பட்டியல் வெளியீடு

19 February 2021, 1:31 pm
Quick Share

திரைத்துறையில் பல சாதனைகள் புரிந்தவர்களுக்கு தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றத்தால் கலைமாமணி விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் பெறும் கலைஞர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பல புது தலைமுறை நடிகர்கள் விருதை பெறுகின்றனர். நடிகர் நடிகை இசை துறையினர் தயாரிப்பாளர் இயக்குனர் நடன இயக்குனர் ஸ்டன்ட் மாஸ்டர்கள் உட்பட பல பிரிவுகளில் பணியாற்றும் சிறந்தவர்களை ஊக்குவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.

நடிகர்களுக்கான பட்டியலில் சிவகார்த்திகேயன் யோகி பாபு மற்றும் ராமராஜன் ஆகியோர் இந்த விருதை பெறுகின்றனர். நடிகைகளில் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி சவுகார்ஜானகி ஆகியோருக்கும், தேவதர்ஷினி ஐஸ்வர்யா ராஜேஷ் சங்கீதா மதுமிதா ஆகியோர் பெறுகின்றனர்.

இசை துறையைப் பொருத்தவரை இசையமைப்பாளர் டி இமான் தீனா, பாடகர்கள் ஜமுனாராணி, சுஜாதா அனந்து ஆகியோர் உள்ளனர். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ் ஆகியோருக்கும் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் லியாகத் அலிகான் மனோஜ் குமார் ரவிமரியா ஆகியோர் இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மட்டும் இல்லாமல் திரைக்குப் பின்னால் பணியாற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், தினேஷ் , நடன இயக்குனர்கள் சிவசங்கர் ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி மெல்லிசை கோமகன், பாடலாசிரியர் காமகொடியன், காதல்மதி, வசனகர்த்தா பிரபாகர், வசனகர்த்தா வி பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுனாத ரெட்டி, ஆடை வடிவமைப்பாளர் ராஜேந்திரன், ஒப்பனையாளர்கள் சண்முகம், சபரிகிரீசன், புகைப்படக் கலைஞர் சிற்றரசு, பத்திரிக்கையாளர் சபீதா ஜோசப், மக்கள் தொடர்பாளர் சிங்காரவேலு, ஷேனை வாசிப்பாளர்கள் பல்லேஷ் – கிருஷ்ண பல்லேஷ் மற்றும் தபேலா வாசிப்பாளர் வி.எல்.பிரசாத் ஆகியோருக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 565

0

0