மளமளவென அதை உயர்த்திய நயன்தாரா..? அதுக்குன்னு இப்படியா கூட்டுவீங்க..!

Author: Rajesh
13 April 2022, 5:07 pm
Quick Share

தமிழ் திரையுலகில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்துள்ளனர்.
இதனிடையே, விக்னேஷ் சிவன், இயக்கவுள்ள நடிகர் அஜித்தின் 62வது படத்திலும் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார்.

தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் பாலிவுட் படமான லயன் படத்திலும் நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா விசாரணை அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி வருகின்றன.

இந்தச் சூழலில் அவர் தனது சம்பளத்தை 3 கோடி ரூபாயிலிருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தினார். இருப்பினும் நயன்தாராவுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதால் அவரை தொடர்ந்து தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தங்களது படங்களில் அவரை நடிக்க வைக்க முன் வந்தனர்.

இந்நிலையில் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் படத்திலும் நயன்தாராவே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்துக்காக அவர் தனது சம்பளத்தை ஐந்து கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மார்க்கெட் இருக்குன்றதுக்காக இப்படியா சம்பளத்த உயர்த்துவாங்க என புலம்பி தீர்த்து வருகின்றனர்.

Views: - 1779

0

0