பசங்க பட ஹீரோவுக்கு கல்யாணம் முடிந்தது… 4 வயசு மூத்த பெண்ணை திருமணம் செய்ய காரணம்?

Author: Shree
24 March 2023, 9:23 am
kishor
Quick Share

கடந்த 2009ஆம் ஆண்டு பள்ளிப்பருவ பிள்ளைகளையும் அவர்களின் வளர்ப்பும் குறித்து வெளியான படம் ” பசங்க ” பாண்டிராஜ் இயக்கி இருந்த இப்படத்தில் தான் விமல் அறிமுகமானார். இதில் குழந்தை நட்சத்திரமாக அன்புக்கரசு வெள்ளைச்சாமி என்ற கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்திருந்தார்.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கோலிசோடா, சகா போன்ற ஒரு சில படங்களில் நடித்தார். இதனிடையே பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தியை காதலித்து கொண்டிருப்பதாக சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார்.

ப்ரீத்தி அவரை 4 வயது மூத்தவர். இதனை நெட்டிசன்ஸ் பலர் ட்ரோல் செய்தனர். இந்நிலையில் தற்போது அவர்கள் எல்லோருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் திருமணம் செய்துள்ளனர். இந்த போட்டோக்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாக பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Views: - 705

2

0