“England ராணி மாதிரி இருக்கீங்க” பிரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் – வர்ணிக்கும் ரசிகர்கள் !
2 March 2021, 1:08 pm2017- ஆம் ஆண்டு ரீலீஸ் ஆன மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இவர் முதன் முதலில் புதிய தலைமுறை சேனலில் நியூஸ் Anchor ஆக இருந்து அதன் பிறகு விஜய் டிவி சீரியல்களில் நடித்து, அதன் பின்பே சினிமாவிற்கு வந்தார்.
மேயாத மான் படத்திற்கு பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.தற்போது களத்தில் சந்திப்போம் ரிலீஸ் ஆன நிலையில் இதற்கு அடுத்து, இந்தியன் 2, குருதி ஆட்டம், ஹரிஷ் கல்யாணுடன் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், அவருக்கு தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ராணி மாதிரி உடை அணிந்து கம்பீரமாக போஸ் கொடுத்து தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “இங்கிலாந்து ராணி” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
5
1