54 வயது நடிகருடன் அரசல், உரசல்.. எல்லை மீறிய ரொமான்ஸ் காட்சியில் பிரியா பவானி சங்கர்..!

Author: Vignesh
5 June 2023, 11:50 am
priya bhavani shankar - updatenewse360
Quick Share

சினிமா பின்பலமே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திறமையால் முன்னேறிய பிரபலங்கள் கோலிவுட் சினிமாவில் பலர் உள்ளனர் அந்த லிஸ்டில் டாப் நடிகையாக மார்கெட் பிடித்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் நுழைந்தார்.

priya bhavani shankar - updatenewse360

ஆரம்பத்தில் நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.

priya bhavani shankar

அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார், ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. Blood Money என்கிற படமும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது. அதையடுத்து அண்மையில் ராகவா லாரன்சுடன் நடித்த ருத்திரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை வரவேற்பை பெற்று வருகிறது.

priya bhavani shankar-updatenews360.png f

கோலிவுட் சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் பிரியா பவானி ஷங்கர் தற்போது, விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 68 படத்தில் பிரியா பவானி ஹீரோயினாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சமூக வலைத்தளங்களில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.

இதனிடையே, எஸ்.ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை படத்தில் பிரியா பவானி நடித்து உள்ளார். சமீபத்தில், இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. அதில் பிரியா பவானி சங்கர் எஸ் ஜே சூர்யா இடையே ரொமான்ஸ் லிப் லாக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 844

15

7