ப்ளே பாய் நடிகரை செம நோஸ் கட் செய்த பிரியா பவானி சங்கர் : வைரல் பதிவு.!

Author: Rajesh
20 April 2022, 5:59 pm
Quick Share

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.

அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார், ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதிலிருந்து இவர் அந்தப் படத்தின் ஹீரோ ஹரிஷ் கல்யாணுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார். பொது இடங்களிலும், பட விழாக்களிலும் இவர்கள் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு வருகின்றனர். அதில் இருவரும் மீடியாவுக்கு ஜோடியாக போஸ் கொடுப்பது கேலி கிண்டல் செய்வது என்று கலகலப்பாக இருக்கும் வீடியோக்கள் அதிக அளவில் பரவி வருகிறது.

தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர், இவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க இவர் தவறுவதே இல்லை. அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அழகான புகைப்படத்தினை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படங்களுக்கு மன்மத லீலை படத்தில் நடித்தன் மூலம் ப்ளே பாய் நடிகராக உயர்ந்த அசோக் செல்வன் அந்த புகைப்படங்களுக்கு கமெணட் செய்திருந்தார். உடனடியாக பிரியா பவானி சங்கர், அசோக் செல்வனை நோஸ் கட் செய்யும் விதமாக “முதல்ல என் போட்டோவுக்கு லைக் பண்ணிட்டு பேசுங்க” என கூறி அவரை நோஸ் கட் செய்தார். இதனை பார்த்த ரசிகர்கள் அசோக் செல்வனை கலாய்த்து வருகின்றனர்.

Views: - 1503

7

4