பாலிவுட் நடிகருடன் விஜய் நடித்த லியோ பட காட்சி லீக்… அப்செட்டில் படக்குழு.. -வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
11 March 2023, 8:00 pm
Quick Share

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி திரைப்படங்களின் மூலம் தென்னிந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணையும் திரைப்படம் தளபதி67. இப்படத்திற்கு ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ளது குறித்து டீசர் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது.

Leo - Updatenews360

இப்படம் குறித்து கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருகிறார். பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மேத்யூ, கவுதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், வஸந்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறார்.

தளபதி67 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்திலேயே தொடங்கி முதல்கட்ட படப்பிடிப்பை சென்னை மற்றும் மூணாறில் நடத்தி முடித்தனர். இந்நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் படக்குழுவினர் 180 பேருடன் காஷ்மீர் பறந்தது. அங்கு 2 மாதங்கள் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது.

இதற்கிடையில், இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக சஞ்சய் தத் தான் நடிக்க இருப்பதாகவும், லியோ ஷூட்டிங் செல்ல அவர் நேற்று மும்பை ஏர்போர்ட் வந்த புகைப்படங்களை இணையத்தில் வைரல் ஆன நிலையில் தற்போது லியோ செட்டில் சஞ்சய் தத் வந்திருக்கும் வீடியோ தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

leo-updatenews360

அந்த வீடியோவில் விஜய்யின் லுக் தான் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Views: - 608

21

3