இறந்த கணவரை நினைத்து சீரியல் நடிகை போட்ட பதிவு – உருகுலைந்து போன ரசிகர்கள்!

Author: Shree
4 August 2023, 11:18 am

நாதஸ்வரம் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதி ஷண்முகப்பிரியா. இதனைத் தொடர்ந்து இவர் சிறிது கால இடைவெளிக்கு பின்னர் வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு பாடிபில்டரும், உடற்பயிற்சியாளருமான அரவிந்த் சேகர் என்பவரை எளிய முறையில் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

திருமணம் ஆகி இருவரும் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து ரீல்ஸ் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தனர். ஸ்ருதி ஷண்முகபிரியா – அரவிந்த் ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பேமஸ் ஆனவர்கள். இந்நிலையில், திடீரென ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பு பிரச்சனையால் நேற்று மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகி சீரியல் வட்டாரத்தில் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்நிலையில், தனது கணவரை பிரிந்த ஸ்ருதி சண்முகப்பிரியா கணவருடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான ரொமான்டிக் போட்டோ ஒன்றை வெளியிட்டு, பிரிந்த உடல் தான். ஆனால், உங்கள் ஆன்மாவும் மனமும் என்னைச் சூழ்ந்து இப்போதும் என்றென்றும் பாதுகாக்கிறது! என் அன்பே அரவிந்த்சேகர்… உங்கள் மீதான என் அன்பு இப்போது மேலும் மேலும் அதிகரித்து வருகிறது, நாங்கள் ஏற்கனவே ஒருவருக்கொருவர் நரக நினைவுகளை வைத்திருந்தோம், அதை நான் வாழ்நாள் முழுவதும் மதிக்கிறேன். உன்னை மிஸ் பண்ணுகிறேன் மேலும் உன்னை நேசிக்கிறேன் அரவிந்த்! என் அருகில் உங்கள் இருப்பை உணர்கிறேன் என ரொமான்டிக் பதிவு போட்டு எல்லோரது மனதையும் உருக்கி விட்டார்.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 884

    1

    0