ரஜினிகாந்தின் காதலை குழி தோண்டி புதைத்த ஸ்ரீதேவியின் தாயார்- அடப்பாவமே!

Author: Prasad
3 May 2025, 1:22 pm

கிளாசிக் ஜோடி

கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ரஜினி-கமல் ஆகிய இருவருமே ஸ்ரீதேவியுடன் போட்டி போட்டு நடித்தனர். 

இதில் ரஜினிகாந்த்-ஸ்ரீதேவி ஆகியோர் ஜோடியாக நடித்த திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. “ஜானி”, “பிரியா”, “போக்கிரி ராஜா” போன்ற பல ஹிட் திரைப்படங்களில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர்.  அதுமட்டுமல்லாது ரஜினிகாந்த் வில்லனாக நடித்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஸ்ரீதேவி நடித்த”மூன்று முடிச்சு”, “16 வயதினிலே” போன்ற திரைப்படங்களில் ரஜினிகாந்த் வில்லனாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் ஸ்ரீதேவியை பெண் கேட்க சென்ற சம்பவத்தை குறித்தான தகவல் ஒன்றை குறித்துதான் இப்போது பார்க்கப்போகிறோம். 

ஐ எம் சாரி ரஜினி…

ரஜினிகாந்த் ஸ்ரீதேவியை ஒரு தலையாக காதலித்து வந்தாராம். ஒரு நாள் ரஜினிகாந்த் இயக்குனர் மகேந்திரனுடன் ஸ்ரீதேவியை பெண் கேட்க சென்றிருந்தாராம். ஸ்ரீதேவியின் வீட்டிற்குள் இருவரும் நுழைந்தபோதே மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டதாம். 

அப்போதே சகுணம் சரியில்லை என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஸ்ரீதேவியின் தாயாரை பார்த்து பெண் கேட்டிருக்கிறார்கள். ஆனால் ஸ்ரீதேவியின் தாயாரோ, “இப்போதுதான் அவள் சினிமாவில் வளர்ந்து வருகிறார். ஆதலால் எனக்கு திருமணம் செய்துகொடுக்க இஷ்டமில்லை” என கூறிவிட்டாராம். இதனால் ரஜினி தனது காதலை உள்ளுக்குள்ளேயே புதைத்துவிட்டாராம். எனினும் பின்னாளில் ரஜினிகாந்த் லதாவை திருமணம் செய்துகொண்டார். அதே போல் ஸ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். 

  • an exciting glimpse video of coolie released கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?
  • Leave a Reply