சுந்தர்.சி-யின் புதிய படத்தின் பூஜை.. இணைந்த மூன்று ஹீரோக்கள்..!

Author: Rajesh
31 January 2022, 7:49 pm
Quick Share

அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தும் விதமாக படங்கள் எடுத்து வெற்றி பெறுபவர் தான் இயக்குநர் சுந்தர்.சி . எதார்த்தமான கதைக்களத்தை கையில் எடுத்துக்கொண்டு சுந்தர்.சியின் இயக்கத்தில் உருவாகும் காமெடியும் கலகலப்புமூட்டும் திரைப்படங்களுக்கு எப்போதுமே, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. அதன்படி கலகலப்பு திரைப்படத்தின் முதலாம் பாகத்தில் நடிகர்கள் விமல், மிர்ச்சி சிவா மற்றும் சந்தானத்தின் கலக்கலான கூட்டணி வெற்றிப் படமாக அமைந்தது. தொடர்ந்து கலகலப்பு படத்தின் 2-ஆம் பாகம் வெளியானது.

அதனை தொடர்ந்து, சுந்தர்.சி எடுக்கும் படங்கள் அனைத்தும் லாஜிக்கை மறந்து சிரிக்க முடியும் என்கிற பெயர் பெற்று பொழுதுபோக்கு படங்களாக ரசிகர்களை சென்றடைந்தது.

இந்நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் மூவரும் ஒரு புதிய படத்தில் இணைகின்றனர். குஷ்பூவின் Avni Cinemax  தயாரிக்கவுள்ள இந்த திரைப்படத்தின் பூஜையில் இப்பட நடிகர்கள் மற்றும் இயக்குநர் சுந்தர். சி கலந்துகொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Views: - 1395

7

2