அனிருத்துக்கு ஆட்டம் கொடுக்கப்போகும் விஜய் ஆண்டனி.. அடுத்து கச்சேரி எப்போது தெரியுமா?

Author: Vignesh
9 October 2023, 4:15 pm
Quick Share

90 கிட்ஸ்களின் பேவரைட் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், நடிகர், திரைப்பட ஆசிரியர், பாடலாசிரியர், ஆடியோ இன்ஜினியர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் இப்படி பன்முக திறமைகளை கொண்டிருக்கிறார். 2005 இல் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி பின்னர் 2014ல் வெளியான சலீம் படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் 2016ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து மிகச்சிறந்த நடிகராக பெயர் வாங்கித்தந்தது. நாகர்கோவிலை சேர்ந்த இவர் பாத்திமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு மீரா, லாரா என இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர்.

இப்படியான நேரத்தில் தான், கடந்த 19ம் தேதி மூத்த மகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி மிகுந்த வேதனைக்குள்ளாகியது. தன் மகளை இழந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் விஜய் ஆண்டனி தான் நடித்துள்ள ” ரத்தம்” படத்தின் ப்ரோமோஷனில் தனது இளைய மகள் லாராவுடன் கலந்துக்கொண்டனர்.

vijay antony

மூத்த மகள் மீராவின் மறைவிற்கு பின் முதல்முறையாக பொது நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி வாழ்க்கையில் தான் பட்ட இழப்புகள், வேதனைகள் நினைத்து கண்கலங்கினார். பின்னர் அடுத்து மீண்டும் படங்களுக்கு இசையமைக்கப்போவதாக கூறினார். தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்துவிடக்கூடாது என்பதற்காக மகளை இழந்த நிலையிலும் பொதுவெளியில் வந்து மேடை ஏறி கனத்த இதயத்தோடு பேசிய அவர், ” நான் வாழ்க்கையில் சிறுவயதில் இருந்தே நிறைய சந்தித்து விட்டேன். நிறைய காயம் பட்டு பட்டு என் மனம் மரத்துப் போனது போல் ஆகிவிட்டது.

Vijay_Antony_updatenews360

என்னுடைய நோக்கம் அடுத்தவர்களை மகிழ்விப்பது தான். நான் பட்ட காயத்தில் இருந்து அடுத்தவர்களை எப்படி விடுவிப்பது என்று அவர்களை எப்பாகி மகிழ்விப்பது என்று தான் என் எண்ணங்கள் இருக்கும். அப்பாவாக தங்கள் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைப்பது இயல்பு ஆனால் அனைத்திற்கும் அனுபவம் தேவை வாழ்க்கையின் எல்லா திசைகளையும் நான் பார்த்து விட்டேன்.

வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தையும் மறக்க வேண்டிய அவசியமில்லை மறக்க யோசிக்க வேண்டாம் நம் வாழ்க்கையே ஞாபகம் தான். எனவே நான் எதையும் மறக்க முயற்சி செய்ய மாட்டேன் வலி ஏற்பட்டால் கூட அந்த வலியோடு வாழ நினைப்பேன். அது எனக்கு பழகிவிட்டது என்று உருக்கமாக பேசி இருக்கிறார். அவரின் பேச்சை கேட்டு…இவ்வளவு வலிமையான மனிதரா விஜய் ஆண்டனி? என அவரை பார்த்து பலரும் ஆச்சர்யம் அடைந்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

மேலும் தனது கெரியர் பற்றி பேசிய அவர், நடிப்பில் ஆர்வம் இருந்ததால் சில நாட்கள் இசையமைக்காமல் இருந்தேன். ஆனால், சமீபத்தில் நடத்திய கச்சேரியில் ரசிகர்கள் ஆரவாரம் செய்து மீண்டும் எனக்கு நம்பிக்கை கொடுத்து ஊக்கமளித்தனர். எனவே அடுத்ததாக பெரிய நடிகர்களின் படங்களில் இசையமைக்கும் பணியில் ஈடுபட உள்ளேன். கூடவே நடிப்பிலும் கவனத்தை செலுத்துவேன் என கூறினார். எனவே இதற்கிடையில் வந்த அனிருத்திற்கு இனிமேல் ஆட்டம் கொடுப்பார் விஜய் ஆண்டனி என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வரும் அக்டோபர் 29ம் தேதி மலேசியாவில் விஜய் ஆண்டனியின் இசைக் கச்சேரி நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள ரத்தம் படம் அக்டோபர் 6 தேதி ரீலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 280

0

0