அட.. ஆமா.. பாக்குறதுக்கு சமந்தா மாதிரியே இருக்காங்களே.. இளம் நடிகையின் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Author: Vignesh
4 March 2024, 4:29 pm
samantha-updatenews360
Quick Share

விஜய் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை கவர்ந்தது பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள்த்தான். அதிலும் குக் வித் கோமாளி வேற லெவல் ரீச். முதல் சீஸனில் வனிதா விஜயகுமார், ரேகா, ரம்யா பாண்டியன், நிஷா உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். முதல் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், அடுத்து தற்போது சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி அதுவும் மகத்தான வெற்றியை பெற்றது.

சீசன் 2 நிகழ்ச்சி ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் கலக்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் கனி, இரண்டாவதாக ஷகீலா, மூன்றாவதாக அஷ்வின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இதில் பங்கேற்ற பவித்ராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். நிறைய இயக்குனர்கள் அவரை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசை பட்டார்கள். மக்கள் அவர்களின் ஆசைப்படி இவர் நடித்த நாய் சேகர் படம் ரிலீசானது.

இவர், மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது சமூக வலைதள பக்கம் மூலம் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் பவி.

pavithra lakshmi

இந்நிலையில், இளம் நடிகையான பவித்ரா லக்ஷ்மி பார்க்க சமந்தா போல் இருக்கிறார் என பலரும் கூறுவார்கள். அதை உறுதி செய்யும் வகையில் சமந்தா போலவே உடை அணிந்து ஒரு முறை பவித்ரா லட்சுமி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

pavithra lakshmi

தற்போது, மிரர் செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த லுக்கில், அப்படியே சமந்தா போலவே இருக்கிறார் பவித்ரா லக்ஷ்மி என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

pavithra lakshmi
Views: - 83

0

0