லெமன் ரைஸ் ரெசிபி: இந்த மாதிரி செய்து கொடுத்தால் கண்டிப்பா லன்ச் பாக்ஸ் காலியா தான் வரும்!!!

Author: Hemalatha Ramkumar
9 May 2022, 5:19 pm
Quick Share

‌உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய எலுமிச்சை சாதத்தை டிபன் பாக்ஸில் லஞ்ச்‌ ரெசிபியாக செய்து கொடுப்பது உண்டு. பலரும் விரும்பி சாப்பிடும் இந்த எலுமிச்சை சாதம் மிகவும் சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இந்த எலுமிச்சை சாதத்திற்கு உருளைக்கிழங்கு வறுவல், வத்தல், வாழைக்காய் வறுவல் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
உதிரியாக வடித்த சாதம் – 2 கப்
எலுமிச்சை பழம் – 2
கடலை எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
பச்சைமிளகாய் -1
கறிவேப்பிலை – ஒரு கொத்து
இஞ்சி – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை:
* முதலில் சாதம் உதிரியாக வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* அடுத்ததாக எலுமிச்சை பழச்சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு , சீரகம், வரமிளகாய், பச்சைமிளகாய், இஞ்சி சிறிதாக நறுக்கியது, கறிவேப்பிலை ஒரு கொத்து‌ சேர்த்து தாளிக்கவும்.

* பின்பு மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் , எலுமிச்சை சாறு , தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கி விடவும்.

* அடுத்ததாக உதிரியாக வடித்த சாதத்தை எலுமிச்சை சாறுடன் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

* பின்பு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

* இப்போது சுவையான லெமன் சாதம் ( எலுமிச்சை சாதம் ) தயார்.

Views: - 922

0

1