பூசணிக்காய் சூப்: மழைக்காலத்திற்கு ஏற்ற ரெசிபி இது தான்!!!

Author: Hemalatha Ramkumar
13 October 2022, 5:17 pm
Quick Share

குளிர்காலம் வருகிறது! ஆரோக்கியமான சூப் ரெசிபிகளைச் செய்ய இதுவே சரியான நேரம். சூப் ஒரு ஆறுதலாக இருப்பதோடு மட்டும் அல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. அந்த வகையில் நாம் தற்போது பார்க்க இருப்பது பூசணிக்காய் சூப்.

பூசணிக்காய்கள் அதிக சத்தானவை மற்றும் கலோரிகளில் மிகக் குறைவு, இது எடை இழப்புக்கு சரியானதாக அமைகிறது. பூசணிக்காய் வைட்டமின் Aயின் மிகவும் வளமான ஆதாரமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது கண்களுக்கு சிறந்ததாக ஆக்குகிறது மற்றும் நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது.

பூசணி சூப் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

1 சிறிய பூசணி
பூண்டு 6-7 பற்கள்
1 சிறிய வெங்காயம்
6-7 முந்திரி பருப்புகள்
2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
ருசிக்கேற்ப உப்பு
சுவைக்கு ஏற்ப மிளகு
1 கப் தண்ணீர்

முறை
*பூசணிக்காயின் தோலைக் சீவி அதன் விதைகளை நீக்கவும். அதை தோராயமாக நறுக்கி, பிரஷர் குக்கரில் சேர்க்கவும்.

*நறுக்கிய பூசணிக்காயில் முந்திரி, வெங்காயம், பூண்டு மற்றும் தண்ணீர் சேர்க்கவும். இது 4-5 விசில் வரை சமைக்கவும்.

*அது வெந்ததும், மூடியை அகற்றி ஆறவிடவும். இப்போது ஒரு மத்து வைத்து நசுக்கி கொள்ளவும்.

*ஒரு சூடான கடாயை எடுத்து அதில் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் நறுக்கிய பூண்டு சேர்க்கவும். பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

*வறுத்த பூண்டு மற்றும் சில பூசணி விதைகளால் சூப்பை அலங்கரிக்கவும். உங்கள் பூசணி சூப் இப்போது சூடாக பரிமாற தயாராக உள்ளது!

Views: - 730

0

0