சிரமம் இல்லாத மாதவிடாய்க்கு நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Author: Hemalatha Ramkumar
17 September 2022, 6:10 pm
Quick Share

மாதவிடாய் காலத்தில் பெண்ணின் உடலில் பலவிதமான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். பெண்களுக்கு தசைப்பிடிப்பு, தலைவலி, வயிற்றுவலி, வீக்கம், சோர்வு, எரிச்சல், சோகம், கோபம், மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் வருவது சகஜம். ஹார்மோன் மாற்றங்கள் பெரும்பாலும் அவர்களின் உணவோடு தொடர்புடையவை. எனவே மாதவிடாய் காலத்தில் சாப்பிடுவதைப் பற்றி சில முன்னெச்சரிக்கைகள் அறிவுறுத்தப்படுகின்றன. அது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

நிறைய தண்ணீர் குடிக்கவும் – தண்ணீர் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது. இந்த காலகட்டத்தில் உடலில் நீர் பற்றாக்குறையை அனுமதிக்கக்கூடாது. இந்த நேரத்தில் நிறைய தண்ணீர் குடிக்கவும். வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது இன்னும் பலன் தரும்.

புதினா டீ- வயிற்றுவலி, பிடிப்புகள், குமட்டல் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகள் இருந்தால் இதையெல்லாம் நீக்க புதினா டீ சிறந்தது.

இரும்புச்சத்து நிறைந்த உணவு – மாதவிடாய் காலங்களில், ஒரு பெண்ணின் உடலில் இருந்து இரத்த இழப்பு ஏற்படுகிறது மற்றும் அதிக இரத்தப்போக்கு உள்ளவர்கள் சில நேரங்களில் இரத்த சோகைக்கு வழிவகுக்கும். இப்பிரச்சனையைத் தவிர்க்க, கீரை, வாழைப்பழம், பூசணி, பீட்ரூட் போன்ற இரும்புச் சத்து நிறைந்த பொருட்களை முடிந்தவரை சாப்பிடுங்கள்.

புரோட்டீன் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள் – மாதவிடாய் காலத்தில் பெண்கள் புரதம் நிறைந்த உணவையும் சாப்பிட வேண்டும். இதன் மூலம் பருப்பு வகைகள், மில்க் ஷேக், தயிர், பால், அசைவம், முட்டை, மீன், முளைக்கட்டிய பயிர்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

கால்சியம் குறைபாட்டை அனுமதிக்காதீர்கள் – பீரியட்ஸ் நேரத்தில் மூட்டு வலி ஏற்படலாம். அதிக கால்சியத்திற்காக உணவில் நட்ஸ், பால் பொருட்கள், சால்மன் மற்றும் மத்தி போன்ற மீன்கள், டோஃபு, ப்ரோக்கோலி போன்றவற்றை உண்ணலாம்.

Views: - 307

0

0