குழந்தை பிறந்த பிறகு மீண்டும் இந்தியன் -2 பிஸியில் காஜல் அகர்வால் : படப்பிடிப்புக்கு முன் கணவருடன் செய்த காரியம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2022, 9:28 am

திரைப்பட நடிகை காஜல் அகர்வால் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் பிரபல திரைப்பட நடிகை காஜல் அகர்வால் அவரது கணவருடன் சாமி தரிசனம் செய்தார்.

தரிசனம் முடிந்த பிறகு ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

அதன்பின் கோயில் வெளியே வந்த அவரை பார்த்து ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து கொண்டனர்.

அதன்பின் பத்திரிகையாளர்களுடன் பேசிய அவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நானும் என் கணவரும் திருமணத்திற்கு பின் முதல் முறையாக இன்று சுவாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சியாக உள்ளதாகவும்.

கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியாக இருக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்த கொள்ள திருப்பதிக்கு வந்து இருக்கிறேன் என்று கூறினார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?