இது தேர்தல் கூட்டம் அல்ல, வெற்றிக் கூட்டம்… திமுக, காங்கிரஸ் முகத்தில் கரியை பூச வேண்டும் ; பிரதமர் மோடி

Author: Babu Lakshmanan
15 April 2024, 6:35 pm
Quick Share

நெல்லை ; குடும்ப அரசியலில் இருப்பவர்கள் தான் போதைப் பொருட்களை ஊக்குவித்துக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

நெல்லை – அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக வாக்குசேகரிக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது :- தமிழகத்தின் மகளிர் மோடிக்கு ஆதரவு அளித்து வருவதாக பல்வேறு ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் நாம் தமிழக பெண்களுக்கு அளித்துள்ள திட்டங்கள் தான் இதற்கு காரணம்.

மேலும் படிக்க: திமுகவின் முகத்திரையை கிழிக்கத்தான்…. கொஞ்சம் பொறுத்திருங்க… அடுத்த அதிரடியே இதுதான் ; வானதி சீனிவாசன்..!!

எம்ஜிஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து அவமதித்துக் கொண்டிருக்கிறது திமுக. சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு நிகழ்த்தப்பட்ட அவமரியாதையை நீங்கள் யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். கச்சத்தீவு விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் பொய்கள் கூறி, திரை மறைவில் தாரைவார்த்து விட்டனர்.

குடும்பங்கள் நடத்தி வரும் அரசியல் கட்சிகள் ஊழலில் திளைத்து வருகின்றன. உங்கள் ஆசிர்வாதத்தால் ஊழல் வாதிகளுடன் சேர்த்து போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் எதிர்த்து போராடுவேன். தமிழ்நாடு போதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. குடும்ப அரசியலில் இருப்பவர்கள் தான் போதைப் பொருட்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றனர்.

வெளியே செல்லும் குழந்தைகள் போதை என்னும் நரகத்தில் தள்ளப்படுவதால் செய்வதறியாமல் மக்கள் தவிக்கின்றனர். போதைப்பொருள் கும்பல் யாருடைய ஆதரவுடன் செயல்படுகிறார்கள் என்பது குழந்தைக்கு கூட தெரியும். தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்க விரும்புபவர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்.

பாஜகவுக்கு தமிழகத்தில் ஆதரவு இல்லை என்று பல ஆண்டுகளாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். மக்களைப் பார்க்கும் போது புதிய வரலாறு படைக்கப்பட இருக்கிறது என்பதை உணருகிறேன். ஒருமுறை பாஜகவுக்கு வாக்களிக்குமாறு முதல் முறை வாக்காளர்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த தேர்தலுக்கு உங்களை நான் சந்திப்பது இதுதான் கடைசி முறை.

மேலும் படிக்க: பாஜக போட்டியிலேயே இல்ல… மாயையை உருவாக்குகிறார் அண்ணாமலை ; எஸ்பி வேலுமணி!!

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி முகத்தில் கரியை பூச வேண்டும். ஒவ்வொரு நொடியும் என் மனதில் உங்கள் பெயர் தான், இந்த நாட்டின் பெயர் தான் ஓடிக் கொண்டே இருக்கும். உங்கள் அன்பையும், ஆசிர்வாதத்தையும் பார்க்கும் போது இது தேர்தல் கூட்டம் அல்ல, வெற்றிக் கூட்டமாக தெரிகிறது. பாஜகவை பார்த்து பயந்து போய் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கின்றனர்.

ஏப்ரல் 19ம் தேதி ஒவ்வொரு பூத்திலும் நீங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். பாஜக கூட்டணி வேட்பாளர்கள் உங்களின் குரலாக டெல்லியில் ஒலிப்பாளர்கள். நாட்டின் வளர்ச்சிக்கு நான் பாடுபடுவதற்கு பாஜகவினரை தேர்வு செய்து எனக்கு உதவியாக அனுப்பி வையுங்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் என்னுடைய வணக்கத்தை நீங்கள் கொண்டு சேர்க்க வேண்டும். பாஜக நிர்வாகிகளுக்கு சொல்லிக் கொள்கிறேன், தமிழக மக்கள் உங்களுடன் இருக்கின்றனர், நானும் இருக்கிறேன், எனக் கூறினார்.

Views: - 120

0

0