மின்னல் வேகப்பந்து… நியூசி., வீரர்களை மிரட்டும் உம்ரான் மாலிக்.. முதல் போட்டியிலேயே வீசிய அதிகபட்ச வேகம் இவ்வளவா..?

Author: Babu Lakshmanan
25 November 2022, 12:51 pm
Quick Share

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரர் உம்ரான் மாலிக் மிரட்டலாக பந்துவீசி வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டம் ஆக்லாந்தில் இன்று நடந்து வருகிறது. இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் சேர்த்துள்ளது.

umran malik - updatenews360

இதைத் தொடர்ந்து, 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் அறிமுக வீரர்களாக, அர்ஷிதீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

அதிக வேகம் போடக் கூடிய பவுலராக விளங்கி வரும் உம்ரான் மாலிக், தனது அறிமுகப் போட்டியின் 3வது ஓவரில் கான்வே-வின் விக்கெட்டை கைப்பற்றி, சர்வதேச அளவிலான முதல் விக்கெட்டை எடுத்து அசத்தியுள்ளார்.

umran malik - updatenews360

அதுமட்டுமில்லாமல், மின்னல் வேகத்தில் பந்து வீசி எதிரணியினரை திணற வைத்து வருகிறார். தான் வீசிய முதல் ஓவரில் அதிகபட்சமாக 149.6 KPH வேகத்தில் வீசினார். 2வது ஓவரில் 150 KPH வேகத்தில் வீசிய அவர், 3வது ஓவரில் அதையும் கடந்து 153 KPH வேகத்தில் வீசினார். இந்தப் பந்துக்கு முந்தைய பந்தில்தான் கான்வே-வின் விக்கெட்டை எடுத்தார். இதைத் தொடர்ந்து, மிட்சலின் விக்கெட்டையும் அவர் கைப்பற்றினார்.

umran malik - updatenews360

உலகளவில் அதிவேகமான பந்தை வீசியவராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் 161.3 KPH வீசியதே இதுநாள் வரையில் அதிகபட்சமாக திகழ்ந்து வருகிறது. இவரைத் தொடர்ந்து, அடுத்த 4 இடங்களில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பவுலர்களே உள்ளனர். ஷேன் டைட் (161.1), பிரெட் லீ (160.8), ஜெஃப் தோம்ஷன் (160.6), மிட்சல் ஸ்டார்க் (160.4) ஆகியோர் உள்ளனர்.

shoaib akhtar - updatenews360

இந்தப் பட்டியலில் முகமது ஷமி (156.4) 9வது இடத்தில் உள்ளார். ஆனால், இவரது வேகத்தை இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் (157) வீசி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார். சர்வதேச போட்டிகளில் விரைவில் அவரது அதிகபட்ச வேகத்தை பதிவு செய்வார் என்று இந்திய ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்துள்ளனர்.

Views: - 403

2

0