ரோகித் ஷர்மாவுக்கு பதில் இந்த வீரரை அணியில் சேர்க்கலாமா..? பத்திரிக்கையாளரின் கேள்வியால் கடுப்பான கோலி..!!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
25 October 2021, 12:11 pm
kohli - rohit sharma - updatenews360
Quick Share

இந்திய டி20 கிரிக்கெட் அணியில் ரோகித் ஷர்மாவை நீக்கலமா..? என்ற பத்திரிக்கையாளரின் கேள்வியால் இந்திய அணியின் கேப்டன் கோலி கடுப்பாகியுள்ளார்.

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் 12 சுற்றில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து, ஆடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை பாகிஸ்தான் அணி பதிவு செய்துள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வியை இந்திய ரசிகர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. மேலும், தொடக்க வீரர் ரோகித் ஷர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் விரைந்து விக்கெட்டுக்களை இழந்ததே காரணம் என்று திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நல்ல ஃபார்மில் இருக்கும் இஷான் கிஷானை, ரோகித் சர்மாவுக்கு பதிலாக விளையாட வைக்கலாமா..? என்று நிரூபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதனால் கடுப்பான கோலி, இந்த கேள்வியை தெரிந்துதான் கேட்டீர்களா? சர்வதேச டி20 போட்டியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா..?, நம்ப முடியவில்லை’ என கேட்டு சிரித்தார்.

kohli - rohit - updatenews360

அதனையடுத்து அந்த கேள்வியை கேட்ட நிருபரிடம், ‘உங்களுக்கு சர்ச்சை ஏதாவது ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினால் என்னிடம் முதலிலேயே கூறிவிடுங்கள், அப்போது தான் நானும் நீங்கள் நினைப்பதை போல சர்ச்சை ஏற்படுமாறு பதில் கூறுவேன்’ என கிண்டலடித்தார். இந்த சம்பவம் குறித்தான வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 581

0

0