என்னை ஏன்மா இங்கிலீஸ் மீடியத்துல சேத்துல.. மிஸ் திட்டிட்டே இருக்காங்க : கடிதம் எழுதி +1 மாணவி எடுத்த சோக முடிவு.!!!

Author: Udayachandran RadhaKrishnan
13 January 2023, 10:21 am
+1 Student - Updatenews360
Quick Share

எதற்கெடுத்தாலும் என்னை மிஸ் திட்டுகிறார்கள்.எனக்கு இங்கிலீஷ் வரவில்லை .என்னை ஏன்மா சின்ன வயசிலிருந்தே இங்கிலீஷ் மீடியத்தில் சேர்க்கவில்லை என கடிதம் எழுதிய +1 மாணவி விபரீத முடிவை எடுத்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த புத்தேரி பகுதியை சேர்ந்தவர் ரஜினிகாந்த். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக உள்ளார். இவருடைய மனைவி லதா. பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள நகை கடையில் வேலை செய்கின்றார்.

இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள். மூத்த மகன் பூஜா கல்லூரி படிக்கின்றார். இரண்டாவது மகள் கனிஷா காஞ்சிபுரம் எஸ் எஸ் கே பள்ளியில் 11ஆம் வகுப்பு தமிழ் மீடியம் படிக்கின்றார். இளைய மகள் பிரதிஷா ஆறாம் வகுப்பு படிக்கின்றார்.

இன்று மாலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் பள்ளிக்கூடம் விடப்பட்டு ஆறு முப்பது மணி அளவில் வீட்டுக்கு வந்த கனிஷா வீட்டின் அறைக்குள் சென்று அம்மாவின் புடவை எடுத்து அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலைக்கு சென்று விட்டு வந்த லதா வீட்டின் கதவு சாத்தப்பட்டிருந்ததை கண்டு கதவைத் தட்டி உள்ளார் .கதவு உள்பக்கம் தாழ்ப்பால் போட்டிருந்த காரணத்தினால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து கதவை திறந்து பார்த்தபோது கனிஷா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மின்விசிறியில் இருந்து கனிஷ்காவை இறக்கி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் ஏற்கனவே உயிர் பிரிந்து விட்டது என கூறியதை கேட்டு கனிசாவின் பெற்றோர்களும் உறவினர்களும் கதறி அழுதனர்.

கனிஷா தற்கொலை செய்வதற்கு முன்னர் ஒரு பக்கத்திற்க்கு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் நான் எந்த தப்பும் பண்ணாமல் இருக்கும்போதெல்லாம் என்னை மிஸ் திட்டுவாங்க. சின்ன சின்ன விஷயத்திற்கும் கூட என்னை திட்டுவாங்க.

நாளைக்கு அப்பாவை பள்ளிக்கூடம் கூட்டிட்டு வர சொன்னாங்க.
எப்பவுமே நான் நியாயமாக இருந்தால் அநியாயமா தான் நடக்கின்றது. கடவுளே இல்லை.

ஒருவாட்டி கூட எனக்கு நல்லது நடக்கல. எப்ப பார்த்தாலும் பிட் அடிச்சவங்க மட்டும் நல்லா மார்க் எடுக்குறாங்க .எப்பவும் படித்து எழுதுற எனக்கு மார்க் ஒருவாட்டி கூட நன்றாக வந்ததே இல்லை.

ஒரு வாட்டி கூட நான் சந்தோஷமாக இல்லை. நான் சைக்கிளில் போகும்போது லாரியில் மாட்டிக் கொண்டு சாக துணிந்தேன். என்னால் சாக முடியவில்லை. எனக்கு உயிரோடு இருக்க பிடிக்கவில்லை .

எல்லார் முன்னாடியும் வைத்து என்னை கேட்டு இருப்பார்களா ? எனக்கு இங்கிலீஷ் வரலை. எனக்கு சத்தியமா வாழ முடியல .எனக்கு சின்ன வயசுல இருந்தே இங்கிலீஷ் வந்திருந்தால் நான் இவ்வளவு கஷ்டம் படாமல் இருந்து இருப்பேன்.

எனக்கே என்னை பிடிக்கவில்லை என்னை ஏமா இங்கிலீஷ் ஸ்கூல்ல சேர்க்கல .ஐ அம் நோ ஹேப்பி. அம்மா, அக்கா, தங்கச்சி நல்லா படிக்கிறாங்க.

என்னால தான் படிக்க முடியவில்லை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் தினந்தோறும் நோட்டில் எழுதும் பழக்கம் உள்ளவர் என கூறப்படுகிறது.

11ஆம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய மாணவி, ஆசிரியர் திட்டியதாலும் இங்கிலீஷில் படிக்க முடியவில்லை என்பதாலும் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 473

1

0