வடசென்னையில் கஞ்சா விற்பனை படுஜோர்…ஆந்திராவில் இருந்து Wholesale-ல் கடத்தல்: பொட்டலம் போட்டு விற்ற 3 பெண்கள் கைது..!!

Author: Rajesh
19 March 2022, 1:31 pm
Quick Share

சென்னை: ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து வட சென்னை பகுதியில் விற்பனை செய்த பெண் கஞ்சா வியாபாரிகள் 3 பேர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓட்டேரி பகுதியில் பெண்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக ஓட்டேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஓட்டேரி போலீசார் புரசைவாக்கம் பொன்னியம்மன் கோவல் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.

அந்த வீட்டில் சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டு பிடித்தனர். இதையடுத்து அந்த வீட்டிலிருந்த புரசைவாக்கம் பிரிக்லின் ரோடு பகுதியைச் சேர்ந்த ஆரவள்ளி (60) நாகவள்ளி (34) புளியந்தோப்பு குமாரசாமி ராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி (எ) அருப்பு கஸ்தூரி (50) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து சிறு சிறு பெட்டலங்களாக அதைப் பிரித்து ஓட்டேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விற்று வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 527

0

0