மதுபோதையில் போலீசாரிடம் தகராறு : 4 பேரை கைது செய்து நடவடிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2021, 11:47 am
Tirupur Arrest -Updatenews360
Quick Share

திருப்பூர் : மதுபோதையில் போலீசாரிடம் தகராறு செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் – பெருமாநல்லூர் அருகேயுள்ள, வாஷிங்டன் நகர் பின்புறமுள்ள காட்டுப்பகுதியில் இளைஞர்கள் சிலர் மது அருந்தி கொண்டிருந்தனர்.

அப்பொழுது அப்பகுதிக்கு சென்ற ரோந்து போலீசாரிடம், மது போதையில் இருந்த இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து மதுபோதையில் இருந்த இளைஞர்களை பெருமாநல்லூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த சரவணன் (வயது 34), மதன்குமார் (வயது 29), கதிரவன் (வயது 29), செல்லப்பாண்டி (வயது 29) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Views: - 531

0

0