தமிழ்நாட்டில் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

18 July 2021, 9:57 pm
TN Secretariat- Updatenews360
Quick Share

சென்னை: தமிழ்நாட்டில் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:- நில நிர்வாகத்துறை கூடுதல் ஆணையர் கே எஸ் பழனிச்சாமி மாற்றப்பட்டு மீன்வளத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடுதலாக மீன்வளத்துறை மேலாண் இயக்குனராக பொறுப்பு வகிப்பார். மீன்வளத் துறை ஆணையர் மற்றும் மேலாண் இயக்குனர் பதவி வகிக்கும் கருணாகரன் மாற்றப்பட்டு பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் பதவி வகித்த அதுல் ஆனந்த மாற்றப்பட்டு தொழிலாளர் நல ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குனர் சரவணன் கூடுதலாக தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் பொறுப்பையும் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் உத்தரவிட்டுள்ளார்.

Views: - 70

0

0