விபரீதமான விளையாட்டு… 4 வயது சிறுவனின் தலைமையில் சிக்கிய சில்வர் பாத்திரம் : நீண்ட போராட்டத்திற்கு பிறகு வெட்டி அகற்றம்..!!

Author: Babu Lakshmanan
1 ஆகஸ்ட் 2023, 10:40 காலை
Quick Share

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் நான்கு வயது சிறுவன் தலையில் மாட்டிக்கொண்ட எவர்சில்வர் பாத்திரம் தீயணைப்பு துறையினர் உதவியுடன் வெட்டி அகற்றப்பட்டது.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அடுத்த அணைத்தலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மிக்கேல் ராஜ். இவரது மகன் சேவியர் (4). சிறுவன் வழக்கமாக இரவு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து விளையாடிக்கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த ஒரு பாத்திரத்தை எடுத்து தலையில் மாட்டியுள்ளார்.

அந்த பாத்திரம் தலையில் வசமாக சிக்கிய நிலையில், அதனை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து. சிறுவன் அலறல் சத்தம் போட்ட நிலையில், பெற்றோரும் பாத்திரத்தை எடுக்க கடுமையாக முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த பாத்திரத்தை எடுக்க பலரும் போராடிய நிலையிலும், அதனை அகற்றமுடியாத நிலை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிறுவன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் தகவல் அளித்ததன் அடிப்படையில், மருத்துவமனைக்கு சென்ற பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் அவர்களிடம் இருந்த பிரத்யேக கருவிகளைக் கொண்டு பாத்திரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து, சிறுவனுக்கு கூடுதல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

4 வயது சிறுவனின் தலையில் சிக்கிய பாத்திரத்தை பல கட்ட போராட்டத்திற்கு பிறகு அகற்றப்பட்ட சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • Tamilisai Thirumavalavan தரம் தாழ்ந்த விமர்சனமா? தப்பாக இருந்தால் வருந்துகிறேன்.. திருமாவளவன் திடீர் பல்டி!
  • Views: - 459

    0

    0