550 சவரன் நகை எங்கே…? உல்லாசத்தை காட்டி இனிப்பு கடைக்காரருக்கு அல்வா கொடுத்த மாடல் அழகி ; திணறும் போலீசார்..!!

Author: Babu Lakshmanan
18 August 2022, 6:56 pm
Quick Share

சென்னை : கள்ளக்காதலியான மாடல் அழகியிடம் 550 சவரனை கொடுத்த இனிப்புக் கடைக்காரரின் வழக்கில், திசை தெரியாமல் போலீசார் திகைத்து போயுள்ளனர்.

பூந்தமல்லி – முத்துநகரைச் சேர்ந்தவர் சேகர் (40). இவர் இனிப்புக்கடை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இவரது இளைய சகோதரர் ராஜேஷ் (37) என்பவருக்கு திருமணமான நிலையில், தனது தம்பி குடும்பத்துடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக சேகரின் மனைவி, அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இதனிடையே, பைனான்ஸ் தொழில் ரீதியாக வேளச்சேரியைச் சேர்ந்த சுவாதி (22) என்ற மாடல் அழகியுடன் சேகருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே 20 வயது வித்தியாசமாக இருந்தாலும், நாளுக்கு நாள் இவர்களுக்கு இடையே நெருக்கம் அதிகமானது.

சேகரிடம் உள்ள பணத்தில் மயங்கிய சுவாதி சேகருடன் மனைவியை போல இருந்து வந்துள்ளார். ஆனாலும், வீட்டுக்கு தெரியாமல் வெளி ஹோட்டல்களில் ரூம் எடுத்தும், ஊட்டி, கோவா உள்ளிட்ட ஊர்களுக்கு இன்ப சுற்றுலா சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

சுவாதி தனக்கு மட்டும் சொந்தமானவள் என்று சேகர் நினைத்து கொண்டிருக்கையில், அவருக்கு பல ஆண் நண்பர்கள் இருப்பது தெரிய வந்தது. இதனால், சுவாதியை தனக்கு மட்டும் சொந்தமாக்கிக் கொள்வதற்காக, வீட்டில் இருந்த தம்பி மனைவியின் நகைகள் 550 சவரன் நகைகளை சுவாதிக்கு போட்டு அழகு பார்த்துள்ளார். ஆனால், அவரோ அந்த நகைகளை தனது ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கும்போது சுவாதி செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது.

சுவாதியுடன் சேகர் பழகி வருவதை அறிந்த அவரது குடும்பத்தினர், சுவாதியை கடத்திச் சென்று கொடுத்த நகைகளை திரும்பக் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர், வேறு வழியில்லாமல், அவரது குடும்பத்தினர் பூந்தமல்லி போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், சுவாதிக்கு சேகர் வாங்கி கொடுத்த காரை மட்டும் போலீசார் பறிமுதல் செய்துள்ள நிலையில் காணாமல் போன 550 சவரன் எங்கே என்று திணறி வருகின்றனர். இருவரையும் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே வேலைக்கு ஆகும் என்று நீதிமன்றத்தில் மனு போட்டு இருவரையும் காவலில் எடுத்துள்ளனர். சுவாதிக்கு 5 நாட்களும், சேகருக்கு 3 நாட்களும் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையில்தான் நகைகள் குறித்த தகவல் வெளிவரும் என்று சேகர் குடும்பத்தினர் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

Views: - 488

0

0