நகை வியாபாரிடம் 2 கிலோ தங்கம் வழிப்பறி செய்த வழக்கு: 7 பேர் கைது…கோவை போலீஸ் அதிரடி..!!

Author: Aarthi Sivakumar
7 November 2021, 2:15 pm
Quick Share

கோவை: வடவள்ளியில் நகை வியாபாரியிடம் 2 கிலோ தங்கம் மற்றும் 7 லட்சம் பணம் வழிப்பறி செய்த வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் கடந்த 30ம் தேதியன்று வடவள்ளி பகுதியை சேர்ந்த நகை வியாபாரி சண்முகம் சக்தியமங்கலத்தில் இருந்து தங்க நகைகளை வாங்கி, அதை ஹால்மார்க் நகையாக மாற்ற 2 கிலோ மற்றும் 7 லட்சம் பணத்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

வடவள்ளி பகுதிக்கு வந்த போது அவரை வழிமறித்த இரண்டு மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, 2 கிலோ தங்கம் மற்றும் 7 லட்சம் பணத்தை வழிப்பறி செய்தனர். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வடவள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த அப்துல் ஹக்கீம், அஸ்ரப் அலி, பவானி, வெங்கடாச்சலம், பவர் சிங், தினேஷ் ராவல், ரஞ்சித் சிங் ஆகிய 7 பேரை தனிப்படை போலிசார் கைது செய்தனர்.மேலும் இதில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகள் இருவரை தேடி வருகின்றனர்.

Views: - 490

0

0