அரசுப் பள்ளி மாணவிகள் 9 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு : கோவை ராமநாதபுரம் பள்ளியில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2022, 3:47 pm
Corporation School Students Dizzy - Updatenews360
Quick Share

கோவையில் மாநகராட்சி பள்ளியில் 9 மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதால் பள்ளியில் மாநகராட்சி அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒரே வகுப்பைச் சேர்ந்த 9 மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவிகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

மாணவிகளுக்கு காய்ச்சலா அல்லது மாணவிகள் உண்டா உணவின் மூலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற கோணத்தில் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள்,உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல அந்தப் பள்ளியின் எட்டாம் வகுப்பு ஏ1 பிரிவில், காய்ச்சல் கேம்ப் அமைத்து பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பள்ளியில் தற்போது மாநகராட்சி துணை ஆணையாளர் சர்மிளா தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திடீரென 9 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பள்ளியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Views: - 324

0

0