துணிவு பட பாணியில் வங்கியில் கொள்ளை… பர்தா அணிந்து டைம் பாம் வைத்த கல்லூரி மாணவன்…ஷாக் சிசிடிவி!!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2023, 1:26 pm
Bank Robbey ateempt - Updatenews360
Quick Share

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கனரா வங்கி கிளையில் அலங்கியம் காந்தி நகரில் வசித்து வரும் ஜெயக்குமார் மகன் சுரேஷ் வயது 19 தாராபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் துணிவு பட பாணியில் கனரா வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டு கருப்பு நிற பர்தா அணிந்து கை, துப்பாக்கி மற்றும் டைம்பாம் எடுத்துக்கொண்டு கனரா வங்கிக்குள் நுழைந்த சுரேஷ் வங்கியில் அமர்ந்திருந்த அலங்கியம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி கருணாகரன் வயது 58 என்பவரை கத்தியை வைத்து பாம் வெடிக்க வைப்பதாக கூறி கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

அப்போது சுரேஷ் கையில் வைத்திருந்த கத்தி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தது அதை சுரேஷ்க்கு கீழே குனிந்து எடுக்கும் பொழுது. விவசாயி கருணாகரன் தனது கழுத்தில் அணிந்திருந்த துண்டை எடுத்து சுரேஷின் கையில் மாட்டி லாபகரமாக சுற்றி வளைத்து பிடித்தார்.

இதனுடைய சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 465

0

0