நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி: நீச்சல் தெரியாததால் நேர்ந்த விபரீதம்..!!

Author: Rajesh
4 April 2022, 8:57 pm
Quick Share

வேலூர்: பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா கிராமத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது வாலிபர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் தேவன். இவரது மகன் பெருமாள் (17), இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா கிராமத்தில் உள்ள கிணற்றில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது நண்பர்கள் கிணற்றில் குதித்து குளித்தபோது ஆர்வத்தில் பெருமாள் தானும் கிணற்றில் குதித்துள்ளார். நெடுநேரமாகியும் நீரிலிருந்து பெருமாள் மேலே வரவில்லை. நீச்சல் தெரியாததால் பெருமாள் கிணற்றில் உள்ள சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

பின்னர் இதுகுறித்து சக நண்பர்கள் பேரணாம்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் பேரணாம்பட்டு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 3 மணி நேரம் போராடி பெருமாளை சடலத்துடன் மீட்டனர்.

இதுகுறித்து பெருமாளின் தாய் முருகம்மாள் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பேர்ணம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். நீரில் மூழ்கி வாலிபர் பலியானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 920

0

0