பல மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் ஏசி அரசு பேருந்து சேவை : முதல்கட்டமாக 702 பேருந்துகள் இயக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2021, 10:42 am
Govt AC Bus -Updatenews360
Quick Share

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி இன்று முதல் 702 ஏசி அரசு பேருந்துகளின் சேவை தொடங்கியது.

தமிழகத்தில் கொரோனா பரவல்குறைந்து வருவதையடுத்து, ஏசிபேருந்துகளின் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்திருந்தார்.

அதன்படி, அரசு போக்குவரத்து கழகங்களில் இருக்கும் 700-க்கும் மேற்பட்ட ஏசி பேருந்துகளில் கடந்த சில நாட்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கிருமிநாசினிகள் தெளித்து,தூய்மை பணிகளும் நடைபெற்றுவந்தன.

இந்நிலையில் ஏசி பேருந்து சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மொத்தம் 702 பேருந்துகள் இருக்கின்றன. தேவைக்கு ஏற்றார்போல், ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள வேண்டும். அனைத்துப்பயணிகளும் சானிடைசர் மூலம்கைகளைச் சுத்தம் செய்த பிறகுதான் பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல், ஏசி பேருந்துகளில் தினமும் கிருமிநாசினி தெளித்து இயக்க சம்பந்தப்பட்ட அனைத்துஅதிகாரிகளுக்கும் உத்தரவிடப் பட்டுள்ளது.

Views: - 272

0

0