சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை : சட்டமன்ற தலைவர் எச்சரிக்கை…

Author: kavin kumar
7 February 2022, 8:17 pm
Quick Share

புதுச்சேரி : புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காத அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்ற தலைவர் செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜ.க.வில் 6 சட்டமன்ற உறுப்பினர்கள், 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் என 9 பேர் உள்ளனர். இதுதவிர சுயேச்சைகள் 3 பேர் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு வாரிய தலைவர் பதவி கிடைக்கும் என 9 மாதம் காலமாக காத்திருக்கும் நிலையில், வாரிய தலைவர் பதவி வழங்குவதில் காலதாமதம் ஏற்ப்பட்டு வருவதால் பா.ஜ.க விற்கு ஆதரவு அளித்து வரும் சுயேட்சைகள் வாரிய தலைவர் பதவி கிடைக்க வில்லை என்றால் பா.ஜ.க.வுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் பா.ஜ.க ஆதரவு சுயட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரும் இன்று சட்ட பேரவையில் உள்ள சட்டமன்ற தலைவரை சந்திக்க வந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், அரசுக்கு ஆதரவு அளித்தும் தங்கள் தொகுதிகளில் மேம்பாட்டு பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறித்து சட்டபேரவை தலைவரிடம் புகார் அளிக்க வந்திருப்பதாகவும், வாரிய தலைவர் பதவி குறித்து தாங்கள் ஆதரவு அளித்துள்ள பா.ஜ.க முடிவு செய்யும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டபேரவை தலைவர் செல்வம் மூன்று ஆதரவு சுயட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னை தங்கள் தொகுதியின் பிரச்சினைகள் காரணமாக தான் சந்திக்க வந்துள்ளதாகவும்,

வாரிய தலைவர் பதவிகள் கொடுப்பது குறித்து தேசிய ஜனநாயக கூட்டனி தலைவர்கள், முதலமைச்சர் ஆகியோர் கலந்து பேசி முடிவெடுப்பார்கள், சுயட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதியின் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் வைத்து பேசி தீர்வு காணப்படும், மூன்று சுயட்சைகளின் ஆதரவு தொடர்ந்து பா.ஜ.க விற்கு இருக்கும் என தெரிவித்த அவர், அரசு பணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் நியாமான கோரிக்கைகளை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றும், 50 சதவிகித அதிகாரிகள் தான் தற்போது அரசுக்கு ஒத்துழுப்பு தருகின்றனர். மீதம் உள்ள அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை, மத்திய அரசிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டு அரசுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு மக்கள் திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும் என கூறினார்.

Views: - 932

0

0