மருத்துவ உபகரணங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை: ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

12 June 2021, 10:31 pm
radhakrishnan - updatenews360
Quick Share

சென்னை: முகக்கவசம் சானிடைசர் போன்றவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் செய்தியாளர்களை சற்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தனியார் மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்களிடம் இஷ்டத்திற்கு கட்டணம் வசூலிக்க கூடாது. மருத்துவமனை நஷ்டத்திலும் இயங்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தான் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மருந்து கடைகளும் நஷ்டத்திலும் இயங்க கூடாது.இந்த நிலையை பயன்படுத்தி கொள்ளை லாபம் நோக்கில் செயல்பட கூடாது. இது உயிர்கள் போக கூடிய ஒரு நோய். ஏற்கனவே தனியார் ஆய்வகங்கள், சில மருத்துவமனைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தவறு செய்பவர்கள் மீது புகார் அளிக்கப்படும் பட்சத்தில், அல்லது ஆய்வு பணி நடைபெறும் போது தவறு நடந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Views: - 104

0

0