சினிமா படப்பிடிப்பின் போது விபத்து : தலையில் 8 தையல் போட்ட பின்பும் காட்சிகளை முடித்து கொடுத்த பிரபல நடிகர்!!

Author: Udayachandran
5 August 2021, 11:43 am
Cheran Injury 1 - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நடந்த சினிமா படப்பிடிப்பின்போது காலிடறி கீழே விழுந்த நடிகர் சேரன் காயமடைந்தார்.

திண்டுக்கல்லில் ஆனந்தம் விளையாடும் வீடு எந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை நந்தா பெரியசாமி இயக்குகிறார். ரெங்கநாதன் தயாரித்து வருகிறார். நடிகர்கள் சேரன், மல்லூரி கௌதம் கார்த்திக் உட்பட நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மின்சார வாரியத்துக்கு பின்னால் உள்ள அங்குவிலாஸ் குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் இதில் ஆனந்தம் விளையாடும் வீட்டின் கட்டடத்தை சுற்றி பார்க்கும் காட்சியில் நடிகர் சேரன் கால் இடறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது.

இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று 8 தையல்கள் அவர் தலையில் போடப்பட்டது. பின்பு அவர் வலியை பொருட்படுத்தாமல் தனக்குள்ள காட்சியில் நடித்துக் கொடுத்தார்.

இதனால் சேரனின் மன ஆற்றலை நடிகர்களும், படக்குழுவினரும் பாராட்டினர். இதையடுத்து நடிகர்களுக்கு தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இயக்குனர் நந்தா பெரியசாமி தெரிவித்தார்.

Views: - 347

1

0