2 மகன்களுடன் செம மாஸாக தனுஷ்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!
Author: Rajesh14 ஜூலை 2022, 2:16 மணி
தமிழ் சினிமாவில் ஒருபக்கம் நடிப்புக்கு தீனி போடும் புதுப்பேட்டை, அசுரன், கர்ணன் போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படங்களிலும், ஒருபக்கம் ஜனரஞ்சகமான திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவர் தனது மனைவியும், நடிகர் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யாவை பிரிந்தார். இது ரசிகர்களிடம் அதிர்ச்சியை கொடுத்தது.
மனைவியை பிரிந்தாலும் மகன்களுடன் அவ்வப்போது தனுஷ் பொழுதை கழித்து வருகிறார். தற்போது ஹாலிவுட்டில் ‘The Grey Man’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. எனவே, இது தொடர்பான புரமோஷன்களில் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் கூட இப்படத்தில் நடிக்க எனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என எனக்கு தெரியவில்லை என தனுஷ் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்தது.
இந்நிலையில், இப்படத்தின் பிரீமியர் ஒளிபரப்பு விழாவில் தனுஷ் தனது மகன்களுடன் கலந்து கொண்டார். தனுஷ் மகன்கள் இருவரும் கோட் சூட் அணிந்து கெத்தாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு பிரபலங்கள் டிடி, நடிகர் பிரசன்னா, ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பலரும் ஹார்ட்டின் போட்டு வருகின்றனர்.
37
1