மீண்டும் கர்ப்பமான ரஜினியின் மகள்..! மகிழ்ச்சியில் குடும்பம்..!

Author: Rajesh
9 August 2022, 1:33 pm
Quick Share

தமிழ் திரையுலகு மட்டுமல்லாது பேன் இந்தியா லெவல் பேமஸ் ஆனவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த். இதில், இவரது 2வது மகள் சௌந்தர்யா முதல் திருமணம் ஒத்து வராத நிலையில், அதிலிருந்து வெளியே வந்து விசாகன் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் 2வது திருமணம் செய்து கொண்டார்.

ரஜினி நடிப்பில் அனிமேஷன் பாணியில் கோச்சடையான் மற்றும் தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படமும் இயக்கினார். ஆனால் இரண்டுமே எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து, இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்த தொடங்கினார்.

சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு பிரம்மாண்டமான அளவில் திருமணம் நடந்தது. சௌந்தர்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், சௌந்தர்யாவுக்கும், அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

கடந்த 2019ம் ஆண்டு நடிகர் விசாகன் வணங்காமுடியை பெற்றோர் சம்மதத்துடன் மறுமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சௌந்தர்யா ரஜினிகாந்த் கர்ப்பம் ஆகி இருப்பதாகவும், வளைகாப்பு விழா நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வணங்காமுடி இல்லத்தில் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அக்டோபரில் பிரசவத்திற்கு டாக்டர்கள் தேதி கொடுத்துள்ளதாகவும், புதிய வரவால் ரஜினிகாந்த் குடும்பம் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது, ரஜினி 4வது முறையாக தாத்தாவாகவுள்ளதாகவும், புதிய வரவுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Views: - 533

0

0